Home » » ஜூலை இறுதியில் துப்பாக்கி டீஸர்

ஜூலை இறுதியில் துப்பாக்கி டீஸர்

விஜயின் துப்பாக்கி பட ட்ரைலர் வெளியீட்டு விழா சில காரணங்களை முன்னிட்டு ஜூலை இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும் காஜல் அகர்வால் நடித்த துப்பாக்கி படத்தின் ட்ரைலர் விஜய் பிறந்த நாளான ஜூன் 22 அன்று வெளிவரும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 

ஆனால் அன்று தான் சகுனி படம் ரிலீஸ் ஆனதால், துப்பாக்கி ட்ரைலர் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என்று இயக்குனர் முருகதாஸ் தெரிவித்தார். முருகதாசின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தாலும் ஜூலை முதல் வாரத்தை ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர். 
தற்பொழுது மீண்டும் ரசிகர்களை ஏமாற்றும் விதமாக துப்பாக்கி ட்ரைலர் ஜூலை இறுதியில் தான் வெளியாகும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் தலைப்பை தற்காலிகமாக தடை செய்யக்கோரி, கள்ளத்துப்பாக்கி என்ற படத்தின் தயாரிப்பாளர் முருகேசன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் நீதிமன்றம் துப்பாக்கி படத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

எனவே துப்பாக்கி படத்தின் ட்ரைலரை வெளியிட முடியாத நிலையில் படக்குழுவினர் இருக்கின்றனர். அதே போன்று அறிவித்த தேதியான ஆகஸ்ட் 15 அன்று துப்பாக்கி வெளிவருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan