Home » » அக்சய்குமாருடன் மீண்டும் விஜய் நடனம்

அக்சய்குமாருடன் மீண்டும் விஜய் நடனம்


முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி பெரிய அளவில் வெற்றி பெற்று அவருக்கு தமிழ்திரையுலகில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இப்படத்தை முருகதாஸ் ஹிந்தியில் ரீமேக் செய்கிறார்.
 துப்பாக்கி படத்தை விட இன்னும் இப்படத்தை ஹிந்தியில் மெகா வெற்றிப்படமாக்க வேண்டும் என்பதற்காக  கதையில் சில அதிரடியான மாற்றங்களை செய்து அப்படத்துக்கு பிஸ்டல் என்று பெயர் வைத்திருக்கிறார்.

 மேலும், பல பாலிவுட் முன்னணி நடிகர்களையும் அப்படத்தில் நடிக்க வைத்திருக்கும் முருகதாஸ், தமிழில் காஜல் நடித்த கதாநாயகி வேடத்துக்கு சோனாக்சி சின்ஹாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார். இதற்கெல்லாம் மேலாக, தமிழில் துப்பாக்கி படத்தில் நாயகனாக நடித்த விஜய்யை ஒரு பாட்டுக்கு நடனமாட வைக்கிறாராம்.
இதுகுறித்து முருகதாஸ், அக்சய்குமாருடன் ஒரு பாடலில் இணைந்து நடனமாட முடியுமா என விஜய்யிடம் கேட்டபோது, எந்த வித கேள்வியும் கேட்காமல் படப்பிடிப்பு எப்பொழுது என்று கூறுங்கள் வருகிறேன் என்றாராம்.

விஜய் சொன்ன இந்த பதிலைக்கேட்டு முருகதாஸ் மட்டுமின்றி அக்சய்குமாருமே ஆச்சரியத்தில் உறைந்து போயிருக்கிறார்களாம். இதையடுத்து, கோலிவுட்டில் ஒரு முன்னணி ஹீரோவாக இருந்தும், ஒரு பாடல் காட்சியில் சிறிது நேரம் ஆட வேண்டும் என்றதும், எந்தவித ஆட்சேபனையும அவர் தெரிவிக்கவில்லையே என்று விஜய் குறித்து பொலிவுட் வட்டாரங்களில் விஜய் பற்றி பெருமையாக பேசிக்கொண்டிருக்கிறாராம் அக்சய்குமார்.



Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan