Home »
» தலைவா தலைவா சரிதம் எழுது
தலைவா தலைவா சரிதம் எழுது
|
கொலிவுட்டில் துப்பாக்கியை தொடர்ந்து விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் தலைவா. ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்திருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில் தலைவா குறித்து நாளுக்கு நாள் புதிது புதிதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. படத்தில் விஜய் மும்பை தாதாவாக நடித்திருக்கிறார் என்று அதன் இயக்குனர் ஏ.எல்.விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கடந்த 1980ம் ஆண்டுகளில் மும்பையைக் கலக்கிய வரதராஜ முதலியாரை பிரதிபலிப்பது போன்று விஜய்யின் கதாபாத்திரம் இருக்கும். விஜய்யை இதுவரை பார்க்காத தோற்றத்தில் காட்ட வேண்டும் என்பதற்காகத் தான் வெள்ளை உடையைத் தெரிவு செய்தேன்.
'தலைவா தலைவா சரித்திரம் எழுது' என்கிற பாடல் படத்தின் ஹைலைட்டாக இருக்கும். சின்னி பிரகாஷ் நடனம் அமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கு விஜய்யுடன் 500 நடனக் கலைஞர்கள் இணைந்து நடனமாடியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். தலைவா படத்தின் இசை வெளியீடு இந்த மாத இறுதியிலும் படம் விஜய் பிறந்த நாளன்று அதாவது யூன் மாதம் 21ம் திகதிலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
0 comments:
Post a Comment