Home » » விஜய்யிடன் நடனமாடும் ஜிவி பிரகாஷ்

விஜய்யிடன் நடனமாடும் ஜிவி பிரகாஷ்

கொலிவுட்டில் வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார். மிகவும் குறுகிய காலத்திற்குள் 25 படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். இவர் பரதேசி படத்திற்கு பின்பு அன்னக்கொடியும் கொடிவீரனும், தலைவா ஆகிய படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் சேர்ந்துள்ளார்.

 மேலும் ஜி.வி.பிரகாஷை கதாநாயகனாக நடிக்க வைப்பதற்கான முயற்சிகள் நடந்து வந்தன. ஆனால் அதற்கு மறுத்துவிட்ட ஜி.வி., தற்போது மத யானைக்கூட்டம் என்ற படத்தை தயாரித்து வருகிறார். இதற்கிடையே சில படங்களில் பாடல் காட்சிகளில் முகம் காட்டி வந்த ஜி.வி.பிரகாஷ், தலைவா படத்தில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா என்ற பாடலில் விஜய் மற்றும் சந்தானத்துடன் இணைந்து நடனமாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan