Home » » ஹாலிவூட்டில் விஜய்

ஹாலிவூட்டில் விஜய்

ஹாலிவுட்டில் படம் இயக்குகிறார் பி.வாசு!! தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்த டைரக்டர் பி.வாசு, ஹாலிவுட்டில் கால்பதிக்கிறார். தனது முதல்படத்தையே த்ரில்லிங்கான பேய் படமாக உருவாக்குகிறார்.

 பணக்காரன், உழைப்பாளி, சின்னதம்பி, மன்னன், சந்திரமுகி உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கியவர் பி.வாசு. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 60 படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது முதன்முதலாக ஹாலிவுட்டில் ஒரு படம் இயக்க உள்ளார். படத்திற்கு "கரி இன் லவ்" என்று பெயர் வைத்துள்ளனர். இப்படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பி.வாசு கூறியதாவது, நான் புதிய படத்துக்கான கதை விவாதத்தில் இருந்தபோது, அமெரிக்க வாழ் தமிழர் ராஜ்திருச்செல்வம் என்பவர் என்னிடம் பேசினார். 

அப்போது தங்களது சந்திரமுகி படத்தை பார்த்தேன், அதேப்போன்று பேய் படம் ஒன்றை ஹாலிவுட்டில் தயாரிக்க உள்ளேன், அப்படத்தை நீங்கள் டைரக்ட் செய்தால் நன்றாக இருக்கும் என்றார். திருச்செல்வம் சொன்ன கதை வித்தியாசமாக இருந்தது, விஞ்ஞானமும், மெய்ஞானமும் கலந்த கதை. இயற்கையை நாம் எவ்வளவு பாழ்படுத்துகிறோம்..? , அதனால் பூமாதேவி எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறாள் என்பதை ஆன்மீகம் மற்றும் அமானுஷ்ய சக்திகள் போன்றவை கலந்த ஜனரஞ்சகப் படைப்பாக இப்படத்தை எடுக்க உள்ளோம். 

காதல், நகைச்சுவை, செண்டிமெண்ட் மற்றும் த்ரில்லிங்காக படம் கொடுக்கப் போகிறோம். ஹாலிவுட் படம் என்றாலும் நம்மூர் ஸ்டைலில் பாட்டும் இருக்கும். இப்படத்தில் பாலிவுட் நடிகை சோனம் கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். அவருடன் அனில் கபூர், ஹாலிவுட் நடிகர் ஜான் ஒயிட் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஹீரோவுக்கான தேர்வு நடக்கிறது என்றார். இதனிடையே இப்படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்க கூடும் என்ற பேச்சும் எழுந்துள்ளது.


இசைஞானி இளையராஜாவும், அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இப் படத்துக்கு இசையமைக்க உள்ளார்கள்.இளையராஜா ஏற்கெனவே ரஜினி நடித்த ஹாலிவுட் படமான ப்ளட் ஸ்டோனுக்கு இசையமைத்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் அவர் பாடல்கள் பாடி இருந்தாலும், அப்பாவும் மகனும் இணைந்து ஒரு படத்துக்கு இசையமைப்பது இதுவே முதல் முறையாகும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan