விஜய்யை கதானாயகனாக வைத்து கவுதம் மேனன் இயக்கும் யோகன் அத்தியாயம் ஒன்று படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக பரவிய வதந்தியை அடுத்து இயக்குனர் கவுதம் மேனன் பதிலளித்துள்ளார்.
ஸ்ருதியிடம் அதைப்பற்றி எதுவும் பேசவில்லை என்றும், சொல்லப்போனால் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ள கதானாயகி பற்றி இனும் ஜோசிக்கவே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், படத்துக்கு பல நடிகர்களை தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பில் இருப்பதாகவும், யோகன் தமிழில் முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய அக்ஷன் திரில்லர் படமாக அமையும் எனவும் அதற்காக விஜய்யை ஒல்லியாக வேண்டும் என்றும் கூறியிருப்பதாக தெரிவித்தார். இதன் படப்பிடிப்புக்கள் பெர்லின் மற்றும் பல்வேறு நாடுகளில் நடக்கவிருப்பதாகவும், படத்தில் ஹாலிவுட் நடிகர்களையும் நடிக்கவைக்க இருப்பதாகவும் கவுதம் மேனன் மேலும் கூறினார்.
இது குறித்து ஸ்ருதியிடம் கேட்ட போது, யோகன் படம் பற்றி தன்னிடம் யாரும் பேசவில்லை என்றும், தன்னிடம் கைனிறைய படங்கள் தற்போது உள்ளன. அவற்றில் தான் நடித்து வருவதாகவும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment