முதன்முதலாக கௌதம் மேனன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கிறார். யோஹன் அத்தியாயம் ஒன்று என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சர்வதேச முகவராக நடிக்கிறார்.
தற்போது யோஹன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகையை நடிக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மேலும் சர்வதேச உளவாளியாக வரும் கதாப்பாத்திரம் என்பதால் கதை வெளிநாடுகளில் இடம்பெறுவது போல் கதை அமைந்துள்ளது. இதனால் கதைப்படி படம் முழுவதும் இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பாவில் உருவாக உள்ளது.
இதனால் கதானாயகி மட்டுமல்லாது வேறுபல கதாப்பாத்திரங்களும் வெளினாட்டு நடிகர்களை நடிக்க வைப்பதற்க்கு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில் யோகனின் அத்தியாயம் ஒன்று படப்பிடிப்புகள் இங்கிலாந்தில் நடைபெறும். ரசிகர்களின் வரவேற்பைத்தொடர்ந்து யோகன் இரண்டாம் மூன்றாம் பாகங்களும் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment