அஜீத் – விஜய் இடையேயான நட்பு இறுக்கமாகி இருக்கிறது. எந்த அளவுக்கு இறுக்கம் என்றால், இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கலாம் என்று முடிவு எடுக்கும் அளவுக்கு! ‘மங்காத்தா’ பட பப்ளிசிட்டி சமயம், இந்தத் தகவலைத் தெரிவிக்கலாம் என்று ரகசியம் காக்கிறார்களாம்!
UKயில் காவலன் குறிப்பிடத்தகுந்த வசூலைப் பெற்றிருக்கிறது. இந்த வருடம் வெளியான தமிழ்ப் படங்களில் காவலனுக்குதான் அதிக வசூல் என்பது விஜய் தரப்புக்கு சந்தோஷம் தரும் செய்தி.