"நான் ரொம்ப அப்பாவியா, வெகுளியா நடிச்ச படங்கள்லாம் நல்ல ஹிட். கொஞ்ச நாள் ரூட் மாறி ஆக்ஷன் பக்கம் போனேன். இந்த 'பாடிகார்ட்' நான் முன்னாடியே செய்திருக்க வேண்டிய படம். சில காரணங்களால் முடியலை.
ஜுனியர் என்டிஆர் நடித்த 'பிருந்தாவனம்' என்ற படம் ஆந்திராவில் அள்ளிக்குவித்துக் கொண்டிருக்கிறது கலெக்ஷனை. அங்கே எண்ணுகிற சில்லறை சத்தம் கோடம்பாக்கத்தின் தீட்டி வைத்த காதில் விழ, இப்பவே போட்டி ஆரம்பித்துவிட்டதாம். படத்தை வாங்கி தமிழில் ரீமேக்கதான்!
“3 இடியட்ஸ்” படத்தின் தமிழ்ப் பதிப்பில் விஜய்யும், தெலுங்குப் பதிப்பில் மகேஷ் பாபுவும் நாயகர்களாக நடிக்கிறார்கள். விஜய்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் முதல் படம் என்பதால் படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு.
எந்திரன் என்ற மெகா பிரமாண்டப் படத்தைக் கொடுத்த ஷங்கர், அடுத்து முழுவீச்சில் 3 இடியட்ஸ் ரீமேக்கில் இறங்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்க என இரு மொழிகளில் உருவாகுகிறது. இதில் அமீர்கான் வேடத்தைச் செய்யப் போகிறவர் விஜய். மாதவன் வேடத்தில் ஜீவாவும், ஷர்மான் ஜோஷி பாத்திரத்தில் சித்தார்த்தும் நடிக்கிறார்கள். ஷங்கர் இயக்கும் முதல் ரீமேக் 3 இடியட்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சித்திக் இயக்கத்தில் விஜயுடன் நடிக்கும் ‘காவலன்’ படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னை வந்ததுதான். போகிற இடமெல்லாம் கறுப்புக் கொடி, ஆர்ப்பாட்டம். படத்துக்கு செருப்படி என தமிழ் உணர்வாளர்கள் காட்டிய கடும் எதிர்ப்பில் பயத்தில் ஸீட்டு நுனியில் அமர்ந்திருப்பது போலவே எப்போதும் காணப்பட்டார் அசின். இந்த பயத்தால் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு படப்பிடிப்பை மாற்றியும் விடாது கறுப்பு எனபதுபோல் அங்கும் போராட்டக்காரர்கள் வருவதாக சொல்லப்பட `எப்போது முடியும் இந்தப் படம், எப்போது மும்பைக்குப் பறக்கலாம்` எனக் காத்திருந்தாராம் அசின்.
இளைய தளபதி விஜய் தற்போது நிறைய படங்களில் ஒப்பந்தமாகி பரபரப்பாக நடித்து வருகிறார். அவர் விரைவில் இயக்குநர் பாலா டீமில் இணையவுள்ளார் என்பதுதான் தற்போது கசிந்திருக்கும் விஷேச செய்தி.