`தலைவா`வில் விஜய்யுடன் இணைந்து பாடும் சந்தானம்

Sunday, January 20, 2013


துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் என்ற பாடலை பாடிய விஜய் தற்போது தான் நடிக்கும் “தலைவா” படத்திலும் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.நடிகர் விஜய் நடிப்பதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய படங்களில் அவ்வப்போது சில பாடல்களை பாடியும் வருகிறார். இவருடைய குரலில் வெளிவந்த அனைத்து பாடல்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன
.மேலும் நீண்ட இடைவெளிக்குப் பின்பு 'துப்பாக்கி' படத்தில் பாடிய கூகுள் கூகுள் என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. இந்த பாடலின் வெற்றி விஜயின் பாடல் ஆசையை மேலும் அதிகரித்துள்ளது.அதன் வெளிப்பாடாக தற்போது இயக்குனர் விஜய் இயக்கத்தில் இவர் நடிக்கும் 'தலைவா' படத்திலும் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.இம்முறை விஜய்யுடன் இணைந்து பாடியிருப்பவர் நகைச்சுவை நடிகர் சந்தானம். ஜீ.வி.பிரகாஷ் இசையில் இவர்கள் இருவரும் இணைந்து பாடியுள்ள இந்த பாடல் மிகவும் நன்றாக வந்திருப்பதாக கூறப்படுகிறது.
Continue Reading | comments

Popular Posts Today

Entertainment

Featured Posts

Whats Hot

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan