Thursday, March 31, 2011
விஜய், சத்யராஜ், இலியானா போன்றோருடன் பணிபுரிவது புதிய அனுபவமாக இருக்கிறது என்று இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார். ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ படத்தை அடுத்து, இந்தியில் ஹிட்டான ‘3 இடியட்ஸ்’ படத்தை ‘நண்பன்’ என்ற பெயரில் ரீமேக் செய்கிறார் ஷங்கர். இதில் விஜய்,சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் டேராடூனில் நடந்து முடிந்துள்ளது.