இளைய தளபதி விஜய்யின் ‘காவல்காரன்’ டைட்டில் தற்போது “காவல் காதல்” என்று மாற்றப்பட்டுள்ளது. நாயகி அசின் இந்தி படத்திற்காக இலங்கை போய்விட்டதால், இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களாக தடைபட்டிருந்தது.
ஜுலை 15 ஆம் தேதி விஜய்யின் ஐம்பத்தியிரண்டாவது படமான வேலாயுதம் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. இந்த தொடக்க விழாவை சென்னை பல்கலைக்கழக நுhற்றாண்டு விழா மண்டபத்தில் பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.