இளைய தளபதியும் என் தம்பி தான்: பவர் ஸ்டார்
இளைய தளபதி விஜய், என் அருமைத் தம்பி என்று நடிகர் பவர் ஸ்டார் ஒன்பதுல குரு இசை வெளியீட்டில் பேசியிருக்கிறார்.
இளைய தளபதி விஜய்யிடம் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றும் பி.டி செல்வகுமார் கதை எழுதி இயக்கும் படம் ஒன்பதுல குரு.
வினய் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.
இதில் கே.எஸ்.ரவிக்குமார், சீனு ராமசாமி என திரையுலகின் முக்கிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
குறிப்பாக இவ்விழாவில் அனைவரின் கவனத்தையும் தன் பால் இழுத்தவர் நம் "பவர்ஸ்டார்"
.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் வெற்றிப்படமாக மாறியதிலிருந்து பவரின் ஆட்டம் மேடைகளில் கலைகட்டுகிறது.
இந்நிலையில் படம் குறித்து பேசிய பவர், இப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறேன்.
செல்வகுமார் என்னை வந்து அணுகியபோது இளைய தளபதி விஜயின் மக்கள் தொடர்பாளர் என்றதும் உடனே ஒப்புக்கொண்டு நடித்துக்கொடுத்தேன்.
இப்படத்தின் மூலம் எனக்கு இளைய தளபதி என்ற ஒரு அருமை தம்பி கிடைத்து விட்டார் என்றார்.
எல்லாமே சரவெடி தான்’- அதிரப்போகும் தலைவா!
இயக்குனர் விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும்
’தலைவா’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன. விஜய்
நடித்த துப்பாக்கி படத்தின் மாபெரும் வெற்றியால், அடுத்த படமான தலைவா
ரசிகர்களால் பெரிதும் எதிபார்க்கப்படுகின்றது. ரசிகர் மன்ற கொடி, தேர்தலில்
தலையீடு என அரசியல் பக்கமும் அவ்வப்போது தலையை காட்டும் விஜய் நடிக்கும்
இந்த படத்திற்கு ‘தலைவா’ என பெயர் வைத்திருப்பதே ரசிகர்கள் மத்தியில் ஒரு அதிர்வை உண்டாக்கியிருக்கிறது.
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்குள்ளாகி இருக்கும் ‘தலைவா’ படத்தின்
அனைத்து பாடல்களும் கம்போஸிங்க் செய்து முடிக்கப்பட்டுவிட்டது என்று தலைவா
படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியதும் டுவிட்டரில் இயங்கும்
விஜய் ரசிகர்கள் ஜி.வி.பிரகாஷிடம் பாடல்களைப் பற்றிய தங்கள் கேள்விக்
கனைகளை தொடுத்தனர்.
அப்போது ஒரு ரசிகர் ‘தலைவா பட பாடலகளில்
உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது?’ என்று கேட்டார். அந்த கேள்விக்கு
ஜி.வி.பிரகாஷ் “எல்லாமே சரவெடி தான்.......” என்று பதிலளித்திருக்கிறார்.
பொதுவாகவே விஜய் நடிக்கும் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடத்தில் பெரிய
மாஸ் இருக்கும், அந்த விதத்தில் ஜி.வி.பிரகாஷின் பதில் அவர்களது
எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துவிட்டது. ”தலைவா படத்தில் ஐந்து பாடல்கள்,
இரண்டு தீம் மியூசிக் உட்பட மொத்தம் ஏழு பாடலகள் இடம்பெற்றுள்ளன” என்றும்
ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.
படப்பிடிப்பில் இருக்கும் ‘தலைவா’
படத்தைவிட பூஜை கூட துவங்கப்படாத ‘ஜில்லா’ படத்தின் செய்திகள் தான் ஹாட்
டாபிக்காக இருக்கின்றன. ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் உருவாகவிருக்கும் ஜில்லா
படத்தை இயக்குனர் நேசன் இயக்குகிறாராம். விஜய்யுடன் முக்கிய
கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கிறார். கும்கி படத்தில் அனைத்துப்
பாடல்களையும் ஹிட் பாடல்களாக கொடுத்த டி.இம்மான் இசையமைக்க, ஒளிப்பதிவாளர்
நட்டி ஒளிப்பதிவு செய்கிறார்.
மேலும் பல பிரச்சனைகளைத் தாண்டி
வெற்றிகரமாக துப்பாக்கி படத்தை ரிலீஸ் செய்த ஜெமினி ஃபிலிம் சர்கியூட்
ஜில்லா படத்தின் உரிமையை கேட்டு ஆர்.பி.சௌத்ரியுடன் பேச்சுவார்த்தை
நடத்திக் கொண்டிருக்கிறதாம். விஜய் நடிக்கும் ஜில்லா படத்தை பற்றிய
செய்திகள் சூடாக இருப்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது விஜய்யின் 'HOT
& SPICY GIRLFRIEND'-ஆன காஜல் அகர்வால் இந்த படத்தில் மறுபடியும்
விஜய்யுடன் ஜோடி சேர்கிறார்.
விஜய் மாறவே இல்லை- ஜில்லா இசையமைப்பாளர் இமான்
Monday, February 11, 2013
கேள்வி: உங்கள் முதல் எண்ட்ரியே விஜய் கையால தொடங்கியது. அப்படி இருந்தும் மறுபடி அவரோடு கூட்டுச்சேர ஏன் இத்தனை வருடங்கள் காத்திருக்கணும்?
பதில்: "ரொம்ப பொடியனா ரீ.வி சீரியல் மியூசிக் பண்ணிக்கிட்டிருந்த எனக்கு `தமிழன்` மூலமா சினிமா ஓப்பனிங் கொடுத்தவர் இளையதளபதி விஜய். அடுத்து விசில் பண்ணேன். அழகிய அசுரா உட்பட கம்ப்ளீட் சாங்ஸ் பெரிய ஹிட். படம் சரியா போகல. னம்ம பாட்டி ஹிட் ஆகிறத விட ஹிட் ஆகிற படத்தில நம்ம பாட்டி இருக்கணும்னு புரிஞ்சுக்கிட்டேன். யோசிச்சு யோசிச்சு அடியெடுத்து வச்சேன். கைட் பண்ண கூட ஒரு ஆளும் இல்லை. எங்க வீட்டில சினிமாவுக்கு வந்த முதல் தலைமுறை நான் தான். தானா மாற்றம் வரத்தானே செய்யும். ம்.. தெம்பா நின்னு சமாளிச்சேன். இன்னைக்கு பல மியூசிக் டைரக்டர்கள் வரிசைல சின்ன அடையாளம் உருவாகியிருக்கு. மனநிறைவும் வந்திருக்கு."
"ஒருநாள் விஜய் போன் பண்ணார். போய் மீட் பண்ணேன். முதல் முறை நான் மீட் பண்ணும்போது எப்பிடியிருந்தாரோ இம்மியும் மாறாம அப்பிடியே இன்றும் பழகினார். `உங்க சாங்ஸை விடாமஃப்லோ பண்றேன். அருமையா பண்றிங்க. எனர்ஜியா இருக்கு. திரும்ப `ஜில்லா` செய்வோம் என்றார். ஓ! தாங்ஸ் மை ஜீஸஸ்."
(Thanks to : Kumutham magazine )
Subscribe to:
Posts (Atom)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)


