ஜூலை இறுதியில் துப்பாக்கி டீஸர்

Saturday, July 14, 2012

விஜயின் துப்பாக்கி பட ட்ரைலர் வெளியீட்டு விழா சில காரணங்களை முன்னிட்டு ஜூலை இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும் காஜல் அகர்வால் நடித்த துப்பாக்கி படத்தின் ட்ரைலர் விஜய் பிறந்த நாளான ஜூன் 22 அன்று வெளிவரும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 

ஆனால் அன்று தான் சகுனி படம் ரிலீஸ் ஆனதால், துப்பாக்கி ட்ரைலர் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என்று இயக்குனர் முருகதாஸ் தெரிவித்தார். முருகதாசின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தாலும் ஜூலை முதல் வாரத்தை ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர். 
தற்பொழுது மீண்டும் ரசிகர்களை ஏமாற்றும் விதமாக துப்பாக்கி ட்ரைலர் ஜூலை இறுதியில் தான் வெளியாகும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் தலைப்பை தற்காலிகமாக தடை செய்யக்கோரி, கள்ளத்துப்பாக்கி என்ற படத்தின் தயாரிப்பாளர் முருகேசன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் நீதிமன்றம் துப்பாக்கி படத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

எனவே துப்பாக்கி படத்தின் ட்ரைலரை வெளியிட முடியாத நிலையில் படக்குழுவினர் இருக்கின்றனர். அதே போன்று அறிவித்த தேதியான ஆகஸ்ட் 15 அன்று துப்பாக்கி வெளிவருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Continue Reading | comments

யோஹனில் இளையதளபதிக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகை

Friday, July 13, 2012

முதன்முதலாக கௌதம் மேனன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கிறார். யோஹன் அத்தியாயம் ஒன்று என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சர்வதேச முகவராக நடிக்கிறார்.


இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படம் குறித்து கெளதம் மேனன் கூறியதாவது, எனக்கு விஜய்யோடு முதல் சந்திப்பு சரியாக அமையவில்லை.
நானும் அவரை வைத்து படம் பண்ண ரொம்ப ஆர்வமாக இருந்தேன். இதன் விளைவே யோஹன் அத்தியாயம் ஒன்று உருவானது. இப்படத்தின் கதாபாத்திரங்கள் விஜய்க்கு புதியது. இப்படம் விஜய்க்கு புதிய வெற்றிப்பாதையை உருவாக்கித்தரும் என்றார்.

தற்போது யோஹன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகையை நடிக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதற்குண்டான பணிகளில் கவுதம் மேனன் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Continue Reading | comments

ஜுலை 16 ல் துப்பாக்கி ரீஸர்

Thursday, July 12, 2012

இளைய தளபதி விஜய் காஜல் அகர்வால் இணைந்து நடிக்கும் துப்பாக்கி படத்தின் ரீஸர் இம்மாதம் 16 ம் திகதி வெளியாகும் எனவும் பாடல்கள் ஜுலை 22 ம் வெளியாகும் எனவும் மேலும் இந்தியாவின் சுதந்திர தினமான ஓகஸ்ட் 15 ம் திகதி துப்பாக்கி திரைக்கு வரும் எனவும் விஜய் மக்கள் இயக்க வட்டாரத்திலிருந்து செய்தி வெளியிட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிகின்றன. எனினும் துப்பாக்கி தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பிலிருந்து உத்தியோகபூர்வமான தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
Continue Reading | comments

ஏழை மாணவர்களுக்கு இளையதளபதி விஜய் கல்வி உதவி [ 30 HD Photos]

Tuesday, July 10, 2012

அஹில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் படிக்கும் 200 ஏழை மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் கல்வி உதவியும் 5 லட்சம் ஏழை மாணவ மாணவியருக்கு இலவசமாக நோட்டுப்புத்தகங்களும் வழன்கியுள்ளார் இளையதளபதி விஜய் அவர்கள்.

Continue Reading | comments

யோகனில் ஸ்ருதி இல்லை - கௌதம் மேனன்

Sunday, July 8, 2012

விஜய்யை கதானாயகனாக வைத்து கவுதம் மேனன் இயக்கும் யோகன் அத்தியாயம் ஒன்று படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக பரவிய வதந்தியை அடுத்து இயக்குனர் கவுதம் மேனன் பதிலளித்துள்ளார். 

Continue Reading | comments

Popular Posts Today

Entertainment

Featured Posts

Whats Hot

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan