
தங்கமகன் வேண்டாம். புதியதாக யோசிச்சு சொல்லுங்கள் - விஜய்
தனது படத்திற்கு தங்க மகன் தலைப்பு வேண்டாமென உறுதியாக விஜய் கூறிவிட்டார்.
ஏ.எல். விஜய்யும் நடிகர் விஜய்யும் முதல் முறையாக இணைந்து பணியாற்றும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடந்து வருகிறது.
பொதுவாக விஜய் படங்கள் முதலில் தலைப்பு அறிவிக்கப்படும். ஆனால் இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை.
எனவே வெகு சீக்கிரமே தலைப்பை அறிவிக்கும் முயற்சியில், பல்வேறு தலைப்புகளை இயக்குனர் யோசித்து வந்தார்.
முதலில் தலைவன் என்ற தலைப்பை அறிவித்தனர். ஆனால் அதை ஜெ.ஜெ டிவி பாஸ்கரன் தன் படத்துக்கு வைத்து, துப்பாக்கியுடன் போஸெல்லாம் கொடுத்திருந்தார்.
இதனால் 80களில் வெளியான ரஜினியின் படத்தலைப்பான தங்கமகன் என்ற பெயரைச் சூட்ட முடிவு செய்தனர்.
இந்தத் தலைப்புக்கு சொந்தக்காரரான சத்யா மூவீஸ் முதலில் சம்மதித்து, பின் மறுத்துவிட்டது.
பின் ரஜினியின் வேறு படத் தலைப்புகளை வைக்கலாமா... தர்மத்தின் தலைவன் தலைப்பை எடுக்க அனுமதி கோரலாமா என்றெல்லாம் யோசித்தனராம்.
ஆனால், இது நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பைக் கிளப்பும் என்பதால், வேண்டாம் என விட்டுவிட்டார்களாம்.
எனவே தன் படங்களுக்கு பழைய படங்களின் தலைப்பு வேண்டாம், புதியதாக யோசிச்சு சொல்லுங்கள் என ஏ.எல். விஜய்யிடம் இளைய தளபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடரும் துப்பாக்கி சர்ச்சை - ஜனவரி 3 மீண்டும் வழக்கு
Friday, December 21, 2012
துப்பாக்கி படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளில் எந்தெந்த காட்சியை நீக்கினீர்கள் என்று தமிழக அரசு விளக்க அறிக்கைத் தரவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
துப்பாக்கி படம் வெளிவந்த அன்று, இஸ்லாமிய இளைஞர்களை தீவிரவாதிகள் போல சித்தரித்து வரும் காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புக்கள் போர்கொடி உயர்த்தின.
அதோடு அந்த படத்தை வெளியிட தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
பின்னர் படத்தயாரிப்பாளர் சார்பில் சர்ச்சைக்குரிய காட்சிகளைப் படத்தில் இருந்து நீக்கி விட்டதாக கூறப்பட்டது.
அதன் பின்னர் படம் பிரச்சனையின்றி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தது.
இப்போது மறுபடியும் இந்திய முஸ்லீம்லீக் சேர்ந்த இப்ரஹீம் என்பவர், துப்பாக்கி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டோம் என்று சொல்லி நீக்காமலேயே துப்பாக்கி படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இஸ்லாமிய இளைஞர்களின் மனதை புண்படுத்தும் படியான இந்த படத்துக்கு கொடுக்கப் பட்ட யு தர சான்றிதழை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, சசிதரன் இருவரும் தமிழக அரசு சார்பாக வாதாடிய சட்டத்தரனியை விசாரித்தனர்.
அப்போது சட்டத்தரனி படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப் பட்ட பின்னரே தமிழக அரசு திரையிட அனுமதி அளித்தது என்று கூறினார்.
இருப்பினும் படத்தில் எந்தெந்த காட்சிகள் நீக்கப் பட்டது என்பதற்கு விரிவான விளக்க அறிக்கையை ஜனவரி 3ம் திகதி சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த வழக்கு மீண்டும் ஜனவரி 3ம் திகதி விசாரணைக்கு வரும் என்றும் தெரிகிறது.

தங்கமகனுக்கும் சிக்கல்- தொடர் தேடலில் விஜய்
Thursday, December 20, 2012
அதென்னவோ தெரியவில்லை, விஜய் பட தலைப்புகளுக்கு மட்டும் வேகத்தடை போடுகிறது விதி. ஏற்கனவே காவல்காரன் படத்தலைப்பை தன்படத்திற்கு வைத்தார் அவர். இந்த தலைப்புக்கு சொந்தக்காரர்களான சத்யா மூவிஸ் நிறுவனத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க,
காவலன் என்று பெயரை மாற்றினார்கள். துப்பாக்கி தலைப்புக்கும் கள்ளதுப்பாக்கி தலைப்புக்கும் நடந்த சண்டை ஊரே அறிந்த விஷயம்.
இப்போது தலைவன் என்ற தலைப்பை விரும்பியவருக்கு அதிலும் சிக்கல். இந்த தலைப்பு சசிகலாவின் உறவினர் பாஸ்கரனுக்கு சொந்தம். வேறு வழியில்லாமல் தங்கமகன் என்று வைத்தார்களாம். இதுவும் சத்யா மூவிஸ் கையிலிருப்பதால், மீண்டும் சிக்கல். பிரபல தயாரிப்பாளரான ஆர்.எம்.வீரப்பனிடம் நைசாக போட்டு வாங்கினார்களாம் இந்த தங்கமகன் தலைப்புக்கு. அவரோ,'அதெல்லாம் முடியாது' என்று கூறிவிட மீண்டும் தலைப்பு தேடி பெரிய வேட்டை நடந்து கொண்டிருக்கிறது.
விஜய் படத்திற்கு வெறும் 'வி' என்று தலைப்பு வைத்தால் கூட தியேட்டர் பிச்சுக்கும். அப்புறம் எதற்கு இத்தனை பிரயத்தனம்?
இப்போது தலைவன் என்ற தலைப்பை விரும்பியவருக்கு அதிலும் சிக்கல். இந்த தலைப்பு சசிகலாவின் உறவினர் பாஸ்கரனுக்கு சொந்தம். வேறு வழியில்லாமல் தங்கமகன் என்று வைத்தார்களாம். இதுவும் சத்யா மூவிஸ் கையிலிருப்பதால், மீண்டும் சிக்கல். பிரபல தயாரிப்பாளரான ஆர்.எம்.வீரப்பனிடம் நைசாக போட்டு வாங்கினார்களாம் இந்த தங்கமகன் தலைப்புக்கு. அவரோ,'அதெல்லாம் முடியாது' என்று கூறிவிட மீண்டும் தலைப்பு தேடி பெரிய வேட்டை நடந்து கொண்டிருக்கிறது.
விஜய் படத்திற்கு வெறும் 'வி' என்று தலைப்பு வைத்தால் கூட தியேட்டர் பிச்சுக்கும். அப்புறம் எதற்கு இத்தனை பிரயத்தனம்?

துப்பாக்கி - அரங்கம் அதிரும் 25வது நாள்
Friday, December 7, 2012
இந்த
தீபாவளிக்கு வெளியான விஜயின் துப்பாக்கி படம் பிரமாண்ட வெற்றி பெற்று
தமிழ் சினிமாவின் சமீபத்திய பெரிய பட்ஜெட் தோல்வி படங்களின் நஷ்டத்தால்
பாதிக்கப்பட்ட திரையரங்க உரிமையாளர்களை நிம்மதி அடைய செய்துள்ளது.
பொதுவாக ரஜினியை படங்களை தவிர வேறு எந்த நடிகரின் படத்திற்கும் கிடைக்காத
ஒரு ஆரம்பம் இந்த துப்பாக்கி படத்திற்கு கிடைத்து உள்ளது... தமிழ்நாடு,
கேரளா, ஆந்திரா, கர்நாடக, மும்பை வெளிநாடுகள் என அணைத்து ஏரியாகளும்
இப்போது துப்பாக்கி வசூல் மழையில் நனைத்து கொண்டு இருக்கின்றன . தமிழ்
நடிகர்களுக்குள் இருந்து வந்த போட்டி போதாது என்று இப்போது கேரளா மற்றும்
கன்னட படங்கள் இதுவரை செய்த வசூல் சாதனை அனைத்தையும் விஜயியன் துப்பாக்கி
முறியடித்து அவர்களின் மண்ணில் சரித்திரம் படைத்து வருகிறது.... மேலும்
திரையிட்டு 25 நாட்களே ஆனா நிலையில் தங்களின் 50 ஆண்
டு
கால சினிமா வசூலை விஜய் வென்றதை தாங்க முடியாமல் கேரளா மற்றும் கர்நாடக
முன்னணி நடிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி உள்ளனர்...
இவர்கள் நிலை இப்படி என்றால் சுனாமி போல தமிழகத்தின் முந்தய படங்களின்
அணைத்து சாதனை வசூலையும் தவிடுபொடி ஆக்கிவிட்டது துப்பாக்கி.... ரஜினி கமல்
போன்ற சீனியர் நடிகர்கள் படம் அஜித் சூர்யா போன்ற சமகால நடிகர்கள் படம் என
பாரபட்சம் பார்க்காமல் துப்பாக்கி வெளுத்து வாங்கிவிட்டது... 25
நாட்களில் 100கோடி என்றால் இனி இப்படம் செய்யும் வசூலை தங்களால் நெருங்க
முடியுமா என்று முன்னணி நடிகர்கள் கலகத்தில் உள்ளனர்.... எந்திரன் போன்று
200கோடி செலவு செய்து 270கோடி வசூல் எடுப்பது பெரிய வெற்றி ஆகாது..
துப்பாக்கி 60கோடி செலவு செய்து 25 நாட்களில் 100கோடி கடத்து உள்ளது
அழிந்து வரும் தமிழ் சினிமாவுக்கு புத்துயிர் கொடுத்துள்ளது என்றே
சொல்லலாம்...
இவர்கள் நிலை இப்படி என்றால் சுனாமி போல தமிழகத்தின் முந்தய படங்களின் அணைத்து சாதனை வசூலையும் தவிடுபொடி ஆக்கிவிட்டது துப்பாக்கி.... ரஜினி கமல் போன்ற சீனியர் நடிகர்கள் படம் அஜித் சூர்யா போன்ற சமகால நடிகர்கள் படம் என பாரபட்சம் பார்க்காமல் துப்பாக்கி வெளுத்து வாங்கிவிட்டது... 25 நாட்களில் 100கோடி என்றால் இனி இப்படம் செய்யும் வசூலை தங்களால் நெருங்க முடியுமா என்று முன்னணி நடிகர்கள் கலகத்தில் உள்ளனர்.... எந்திரன் போன்று 200கோடி செலவு செய்து 270கோடி வசூல் எடுப்பது பெரிய வெற்றி ஆகாது.. துப்பாக்கி 60கோடி செலவு செய்து 25 நாட்களில் 100கோடி கடத்து உள்ளது அழிந்து வரும் தமிழ் சினிமாவுக்கு புத்துயிர் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்...
Labels:
துப்பாக்கி

விஜய் படத்துக்கு ரஜினி படத்தின் பெயர் - தங்க மகன்
Wednesday, December 5, 2012
இளைய தளபதி விஜய் சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. 1992ல் நாளைய தீர்ப்பு மூலம் அறிமுகமானவர் விஜய். இறுதியாக துப்பாக்கி உலக அளவில் வெற்றி பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக ஏ.எல். விஜய்யுடன் ஒப்பந்தமாகியுள்ள இளையதளபதி அமலாபாலுடன் ஜோடி சேர்கிறார்.
இதற்கான முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் ஆரம்பமானது. இன்னிலையில் திரைத்துறைக்கு வந்து 20 வெற்றி வருடங்கள் ஆகியுள்ள நிலையில் அனைவருக்கும் பிடித்தமான தலைப்பை வைக்கவேண்டும் என படக்குழு தீர்மானமாக இருந்தனர். இதற்காக தலைவன் உள்ளிட்ட பல தலைப்புக்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியாக தங மகன் என்ற சூப்பர்ஸ்டாரின் படத்தலைப்பை வைக்க முடிவு செய்ள்ளனர்.

எந்திரனை மிஞ்சிய துப்பாக்கி - வசூலில் சாதனை
தமிழ் சினிமா படங்களில் ரஜினியின் எந்திரன் படத்திற்கு பிறகு விஜய் நடித்த துப்பாக்கி படம் ரூ.100 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்துள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய், காஜல் அகர்வால், ஜெயராம், சத்யன், வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் துப்பாக்கி. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே புகைப்பிடிக்கும் காட்சிக்கு பிரச்னை, தலைப்பு பிரச்னை என்று பல பிரச்னைகளை சந்தித்து கடைசியாக தீபாவளிக்கு ரிலீசானது துப்பாக்கி படம்.
பொதுவாக விஜய் படம் என்றாலே ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் இந்தப்படம் விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முதல்படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இன்னும் அதிகமானது. எதிர்பார்த்தபடியே துப்பாக்கி படமும் ரிலீசாகி வசூல் ரீதியாக சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. ரிலீஸ் ஆன முதல் வாரத்தில் மட்டும் சுமார் ரூ.50கோடி வசூலை அள்ளிய இப்படம் இப்போது ரூ.100 கோடி வசூல் லிஸ்ட்டில் சேர்ந்து சாதனை படைத்து இருக்கிறது.
இதுகுறித்து துப்பாக்கி படத்திற்கான இணையதளத்தில் டைரக்டர் முருகதாஸ் கூறியிருப்பதாவது, துப்பாக்கி படம் ரூ.100 கோடி வசூல் லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறது. 10நாளில் இந்த வசூல் சாதனையை எட்டியுள்ளது. இதன்மூலம் இந்த பாக்ஸ் ஆபிஸ் லிஸ்ட்டில் சேரும் 2வது தமிழ்படம் துப்பாக்கி என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இதுவரை ரஜினியின் எந்திரன் படம் மட்டுமே ரூ.100 கோடிக்கு மேல் வசூலான தமிழ்ப்படடம் என்று இருந்து வந்த நிலையில், இப்போது அந்த லிஸ்ட்டில் ரஜினிக்கு அடுத்தப்படியாக விஜய்யின் துப்பாக்கி படமும் இணைந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் லிஸ்ட்டில் இணைந்து இருக்கிறது. மேலும் விஜய் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலேயே துப்பாக்கி படம் தான் ரூ.100 கோடியை தாண்டி வசூல் ரீதியாக சாதனை படைத்து கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)